

தாலிபான் அமைச்சரவை கூட்டத்தில் கலகலப்பு ; அமைச்சரின் கை முறிந்தது!
ஆப்கானிஸ்தானில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேர்வுத் தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் பத்திரிகையாளர் பிலால் சர்வாரி, தலிபான் அமைச்சரவைக் கூட்டங்களில் கைகலப்புகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாக ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பிலால் சர்வாரி தனது ட்வீட்டில், “தாலிபானின் MoHE ஷேக் நெய்டா மற்றும் தேர்வு வாரியத் தலைவர் ஷேக் பாக்கி ஹக்கானி ஆகியோர் வாரியத் தேர்வுத் தாள்களுக்கு மதிப்பெண் அளிப்பது தொடர்பாக சர்ச்சையில் ஈடுபட்டனர். ஷேக் பாக்கி ஹக்கானியிடம் முறைப்பாடு செய்த நிலையில், சண்டை முற்றி ஷேக் நெடாவின் கை உடையும் நிலை ஏற்பட்டது” என பதிவிட்டுள்ளார்.
CATEGORIES உலகம்