பாரதிய ஜனதாவை கண்டித்து 14 கட்சிகள் உச்ச நீதிமன்றில் வழக்கு!

பாரதிய ஜனதாவை கண்டித்து 14 கட்சிகள் உச்ச நீதிமன்றில் வழக்கு!

ராகுல் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றில் இன்று 14 கட்சிகள் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசிய மாநாடு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட 14 கட்சிகள் அந்த மனுவில் கையெழுத்திட்டு இருந்தன.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விசாரணை என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நாங்கள் எந்த வழக்கு விசாரணையையும் ரத்துசெய்ய வேண்டும் என்று கோரவில்லை. அதே சமயத்தில் வழக்கு விசாரணை நடவடிக்கைக்கு முன்பு நடைமுறைகளை வரையறுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஏவி விடப்பட்டு மத்திய அரசால் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டு இருந்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுவை 14 கட்சிகள் சார்பில் அபிஷேக் சிங்வி தாக்கல் செய்தார்.

14 கட்சிகளின் சார்பில் அவர் நீதிபதிகளிடம் முறையிட்டு பேசினார். இந்த முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This