மூன்று பில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பு…

மூன்று பில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பு…

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் இதுவரை 3,30,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இம்மாதம் 21ஆம் திகதி வரை 84,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக குறித்த அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளில் பெருமளவானோர் ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.

இதேவேளை, சுற்றுலாத்துறை மூலம் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு மூன்று பில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This