அரைசொகுசு பஸ் சேவைகளை இடைநிறுத்த கவனம்…

அரைசொகுசு பஸ் சேவைகளை இடைநிறுத்த கவனம்…

அரை சொகுசு பஸ் சேவைகளை இடைநிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரை சொகுசு மற்றும் சாதாரண பஸ் சேவைகளுக்கு இடையே சிறிய வித்தியாசமே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்த நிலையில், அரை சொகுசு பஸ் சேவைகளை சாதாரண பஸ் சேவையாக அல்லது குளிரூட்டப்பட்ட பஸ் சேவையாக மாற்றுவது தொடர்பில் ஆராயுமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்கு அறிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

எனினும், அரை சொகுசு பஸ் சேவைகளை இடைநிறுத்துவதற்கான இறுதித் திகதி தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர்  தெரிவித்துள்ளார்

CATEGORIES
Share This