

சந்தா செலுத்தாத டுவிட்டர் கணக்கில் ‘ப்ளூ டிக்’ அகற்றம்!
டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் ‘ப்ளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் இருந்து மாதம் தோறும் கட்டண சந்தா செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் சந்தா கட்டணங்களை செலுத்தாத டுவிட்டர் கணக்குகளில் இருந்து வருகிற ஏப்ரல் 1ஆம் திகதி முதல் ப்ளூ டிக் அகற்றப்படும் என்று டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழைய சரிபார்ப்பு திட்டத்தை படிப்படியாக நீக்கி, சந்தா செலுத்தாத கணக்குகளில் ப்ளூ டிக் அகற்றப்படும் என்று டுவிட்டரில் நீல நிற சரிபார்ப்பு அடையாளத்தை வைத்திருந்த தனிநபர்கள் டுவிட்டர் ப்ளூவில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES உலகம்