

இந்தியாவில் உள்ள விமானிகளில் 15% பேர் பெண்கள்!
இந்தியாவில் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் எனவும், இது உலக சராசரியான 5 சதவீதத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் விமான நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, “2021 ஆம் ஆண்டில் மொத்தம் 244 விமானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுவே, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிற்கு ஆண்டுக்கு 1,000 விமானிகள் தேவைப்படலாம்” என்று தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதில், வணிக விமானிகளின் வருடாந்தரத் தேவையானது ஒரு விமான நிறுவனத்தின் நிதி ஆரோக்கியம், விமான நிறுவன விரிவாக்கத் திட்டம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சி போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CATEGORIES இந்தியா