அவசரமாக ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்!

அவசரமாக ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்!

Bookmark and Share

நீதித்துறையின் கௌரவத்தையும் ஆளுமையயும் குழிதோண்டிப் புதைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கையில் நேற்று (22) கையொப்பமிட்டுள்ளனர். 

ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர். 

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ளதாகவும் அவ்வாறான நிலைமைக்கு எதிராக கூட்டு வேலைத்திட்டம் தேவை எனவும் கூறி இந்த கூட்டறிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This