தேயிலை தளிர்களிலிருந்து குழந்தைகளுக்கு சோப்பு; இலங்கையில் புதிய முயற்சி

தேயிலை தளிர்களிலிருந்து குழந்தைகளுக்கு சோப்பு; இலங்கையில் புதிய முயற்சி

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தேயிலை தளிர்களை கொண்டு உயர் மருத்துவ குணம் கொண்ட குழந்தைகள் சோப்பை உற்பத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த சோப்பு புதிய தேயிலை இலைகளின் சாற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பிளாக் டீ வாசனையோடு இருக்கும்.

இயற்கையான பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த சோப்பு தயாரிக்கப்பட்டுள்ளதால் குழந்தையின் தோலுக்கு பாதிப்பு ஏற்படாது என தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தயாரிப்பு காப்புரிமை சான்றிதழைப் பெற்ற பிறகு, வணிக அளவில் உற்பத்தி செய்யக்கூடிய எந்தவொரு நபருக்கும் தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This