உலக பணக்காரர்களில் அம்பானிக்கு 9ஆவது இடம்- அதானி 23ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்!

உலக பணக்காரர்களில் அம்பானிக்கு 9ஆவது இடம்- அதானி 23ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்!

‘ஹுருண் இந்தியா’ ஆய்வு நிறுவனம், எம்3எம் மனை வணிக நிறுவனம் ஆகியவை இணைந்து உலக பணக்காரர்கள், இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இதில் அகமதாபாத்தை சேர்ந்த 60 வயதான இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மார்ச் 15ஆம் திகதி நிலவரப்படி ரூ.4.37 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 2022-23ஆம் நிதியாண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 60 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு வாரமும் ரூ.3000 கோடி இழப்பை அதானி சந்தித்து வருகிறார்.

அதானி நிறுவனம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட தாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

CATEGORIES
TAGS
Share This