தமிழ் சிறுபான்மையினருக்கு கூடுதல் சுயாட்சியை IMF வலியுறுத்த வேண்டும்

தமிழ் சிறுபான்மையினருக்கு கூடுதல் சுயாட்சியை IMF வலியுறுத்த வேண்டும்

இலங்கைக்கு நிதியை வழங்குவதற்கு முன்னர் தமிழ் சிறுபான்மையினருக்கு கூடுதல் சுயாட்சி என்ற விடயத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

எனினும் அவரது கருத்துக்கள் கனேடிய கொள்கையை பிரதிபலிக்கின்றனவா என்பது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி எதனையும் கூறவில்லை.

எந்தவிதமான அளவீட்டின்படியும், இலங்கை தோல்வியுற்ற மற்றும் வங்குரோத்து நாடாகும்.

அத்துடன் நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிசெய்யும் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலைமை இல்லாத நாடு என்றும் கெரி ஆனந்தசங்கரி கூறியுள்ளர்.

எனவே, சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் மொத்த மற்றும் கடுமையான மீறல்களில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் தமிழ் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்த வேண்டும் என்று கெரி ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.

CATEGORIES
Share This