தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது!

தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது . இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார்.

CATEGORIES
TAGS
Share This