கலிபோர்னியாவை புரட்டிப்போட்ட கடும் சூறாவளி!

கலிபோர்னியாவை புரட்டிப்போட்ட கடும் சூறாவளி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாவை புயல் தாக்கியிருந்த நிலையில் மீண்டும் சூறாவளி புயல் தாக்கி உள்ளது. புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு வருகிறார்கள். வீதிகளில் பலஅடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி உள்ளன. கடலோர பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This