

அதிகரித்து வரும் கொரோனா- பிரதமர் மோடி அவசர ஆலோசனை
இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்து கடந்த 19ஆம் திகதி ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரே நாளில் 1,071 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.
ஆனால் மறுநாள் 918 ஆகவும், நேற்று 646 ஆகவும் பாதிப்பு குறைந்த நிலையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
CATEGORIES இந்தியா