இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் IMF நிபந்தனை விதிக்கவேண்டும்!

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் IMF நிபந்தனை விதிக்கவேண்டும்!

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமனறத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன்,

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும், அவற்றில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு விடயமும் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாணய நிதியத்தால் வழங்கப்படும் நிதி உதவி அன்றாடம் உணவுக்கு கஷ்டப்படும் ஏழை மக்களை சென்றடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This