சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்கா போட்ட திட்டமே IMF உதவி திட்டம்

சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்கா போட்ட திட்டமே IMF உதவி திட்டம்

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, மேற்குலக நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் புறச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு நல்லதொரு சமிஞ்சையல்ல என்றும் நாடு தொடர்ந்து கடன்சுமைக்குள் சிக்குண்டுள்ளது என்பதை மென்மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள ஆட்சியாளர்களே, சிங்கள- தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கி, தமிழர்களுக்கு எதிரான வன்மங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தாக கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

யுத்தத்தின் பின்னர் நாடு அபிவிருத்தி பாதையில் செல்லாமல், அழிவு பாதையில் சென்றிலுந்ததாகவும் ஆகவே கடந்த 75 ஆண்டுகாலமாக கடைபிடித்த ஒற்றையாட்சி முறைமையை கைவிட்டு, தமிழர் தொடர்ந்து வலியுறுத்தும் சமஸ்டியாட்சி அரசியல் முறைமையை அமுல்படுத்துமாறு கஜேந்திரன் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாவற்குழியில் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவினால் பௌத்த விகாரை திறந்து வைக்கப்பட்டது.

ஒரு சிங்களவர்கள் கூட வாழாத நாவற்குழி பகுதியில் ராஜபக்சர்களினால் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டது.

புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு, இனபடுகொலையாளி சவேந்திர சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This