

கொழும்பில் ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய இரு குழுக்களுக்கு இடையில் முறுகல்
கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இரு குழுக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆசிரியர்களின் இடமாற்றத்தை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மற்றுமொரு குழுவினர் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிள்ளைகளின் கல்வி உரிமையை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான சூழலில் அப்பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு இடையில் முறுகல் நிலை பதிவாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பில் கோட்டை புகையிரத நிலையம் உட்பட பல முக்கிய இடங்களுக்குள் பிரவேசித்து அந்த இடங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், கோட்டை நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.