வெடியரசன் கோட்டையில் கடற்படையினரால் அமைக்கப்பட்ட பதாகையை புகைப்படமெடுக்க தடை!

வெடியரசன் கோட்டையில் கடற்படையினரால் அமைக்கப்பட்ட பதாகையை புகைப்படமெடுக்க தடை!

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை தொடர்பாக நெடுந்தீவு இறங்குதுறையில் கடற்படையினரால் அமைக்கப்பட்ட பதாகையை புகைப்படமெடுக்க கடற்படையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையுடன் அடையாளபடுத்தி கடற்படையினரால் அப்பகுதியில் அமைக்கப்பட்ட பதாகை தொடர்பான புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அது பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக நெடுந்தீவு இறங்குதுறையில் கடற்படையினரால் நெடுந்தீவு வெடியரசன் கோட்டை தொடர்பாக பதாகை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நெடுந்தீவுக்கு செல்பவர்கள் குறித்த பதாகையை புகைப்படமெடுக்க அங்கிருக்கும் கடற்படை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This