நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கு மக்களின் அர்ப்பணிப்பு பெரும் பலமாக இருந்தது

நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கு மக்களின் அர்ப்பணிப்பு பெரும் பலமாக இருந்தது

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சமர்ப்பித்து குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகின்றார்.

பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கு மக்களின் அர்ப்பணிப்பு பெரும் பலமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் குழப்பம் ஏற்பட்டபோது, எவரும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கவில்லை என்றும் தனக்கு நாடாளுமன்றத்தில் அதிகாரம் இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என தான் நம்பியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சர்வதேச அங்கீகாரத்தை மீட்டெடுக்கும் என்றும் நாடு திவாலாகிவிடாமல் இருப்பதை உறுதிசெய்து வங்கிகள் சர்வதேச அங்கீகாரத்தை மீண்டும் பெற உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து வலுவான புதிய பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் என்றார்.

VAT வரி மீதான தற்போதைய விலக்குகளை 2024க்குள் குறைக்கவும், எளிமைப்படுத்தப்பட்ட VAT முறையை அகற்றவும், அதன் திருப்பிச் செலுத்துதலை விரைவுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என கூறியுள்ளார்.

2025 ஆண்டளவில் முதன்மைப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% ஆகக் குறைக்கவும், 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% வருவாயை அதிகரிக்கவும் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

நிலையான கார்ப்பரேட் வருமான வரி விகிதம் 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் துறை சார்ந்த வரி விடுமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. செலுத்தும் வரி விகிதம் 12% லிருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் வரி விலக்கு வரம்பு 300 மில்லியனில் இருந்து 80 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This