

இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,071 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.
இந்நிலையில் நேற்று பாதிப்பு 918 ஆக குறைந்த நிலையில் 2ஆவது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 646 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 96 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 435 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 617 பேர் குணமடைந்துள்ளனர்.
CATEGORIES இந்தியா