

இலங்கைக்கு பச்சைக்கொடி காட்டிய IMF; வெடி கொழுத்தி கொண்டாடிய பலர் வெடி
இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணை எடுப்பு கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று கொழும்பு – மருதானை பகுதியில் பலர் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே, இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடன் வசதிக்கு அனுமதி வழங்கியதைக் கொண்டாடும் பலர் மருதானை பகுதியில் காணப்பட்டனர்.