ஈழத்தமிழர்களுக்கு பாடுபட மகளை அனுப்பிய சத்யராஜ்!

ஈழத்தமிழர்களுக்கு பாடுபட மகளை அனுப்பிய சத்யராஜ்!

இலங்கை நாட்டில் வடமாகாண பகுதியில் நெடுந்தீவு பசுமை பள்ளி, வடக்கு பசுமை சமுதாயம் என்கிற பெயரில் என் மகள் திவ்யாவும் ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரகாசனும் இணைந்து ஒரு அற்புதமான திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது  அங்குள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும்.  ஈழத்  தமிழர்களுக்காக என் மகள் தொடர்ந்து தொண்டாற்றுவார் என்று குறிப்பிட்டு இருந்தார். சத்யராஜின் இந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து பழ.நெடுமாறன்.  எழுதி இருக்கும் கடிதத்தில், ஈழத் தமிழர் நலனுக்காக என் மகள் தொடர்ந்து தொண்டாற்றுவார் என்று தாங்கள் வெளியிட்ட அறிக்கையை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இலங்கையில் உள்ள நெடுந்தீவில் பசுமை பள்ளி பசுமை சமுதாயம் என்ற அமைப்புகளின் மூலம் ஈழத் தமிழர் குழந்தைகளுக்கு தொண்டாற்றி வரும் ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திர காசன் உடன் இணைந்து தங்களின் அருமை புதல்வி திவ்யா தொண்டாற்றி வருவதை அறிந்து மிக மகிழ்ந்தேன்.  

தாங்கள் தங்கள் மகள் திவ்யா ஈழத்தமிழர்களுக்கு ஆற்றி வரும் தொண்டினை அறிந்து பெற்ற தந்தை என்ற முறையில் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என்பது இயற்கையே. உங்களுக்கு பெருமையை பெற்று தருவது தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.   திவ்யாவின் தொண்டு பெருகட்டும் ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் பிறக்கட்டும். தங்களுக்கும் தங்கள் மகளுக்கும் என் பாராட்டும் வாழ்த்துக்களும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This