தமிழ் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றில் இழைக்கப்படும் அநீதி; சிறீதரன் எம்.பி. சபையில் வெளிக்கொணர்வு

தமிழ் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றில் இழைக்கப்படும் அநீதி; சிறீதரன் எம்.பி. சபையில் வெளிக்கொணர்வு

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்றில் புறக்கணிக்கப்படுவதாகவும், அவர்களின் சிறப்புரிமை மீறப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய சிவஞானம் சிறீதரன், இந்த விடயம் தொடர்பில் எதிர்க் கட்சி தலைவரும் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்தார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக இரண்டாவதாக தனது பெயர் இருந்தபோதும், எந்தவொரு அறிவிப்புமின்றி நான்காவதாக மாற்றப்பட்டுள்ளது என்றும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இதன்மூலம் தான் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும், இது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய சிறப்புரிமை மீறல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

CATEGORIES
Share This