எல்.வி.எம்-3 ரொக்கெட் 26ஆம் திகதி விண்ணில் ஏவப்படுகின்றது!

எல்.வி.எம்-3 ரொக்கெட் 26ஆம் திகதி விண்ணில் ஏவப்படுகின்றது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ரொக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது.

அந்தவகையில், அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ரொக்கெட்டான ‘எல்.வி.எம்.எம்-3’ ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

எல்.வி.எம்-3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ரொக்கெட்டாகும். முன்பு இந்த ரொக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது. இந்த ரொக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து வருகிற 26ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

CATEGORIES
TAGS
Share This