தேர்தலை பிற்போட ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை

தேர்தலை பிற்போட ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தவில்லை எனவும் தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சாகர காரியவசம் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் மாநகர சபை ஆணையாளர்களிடமும், பிரதேச சபை செயலாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தரப்பினரால் முன்னெடுக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன ஒருபோதும் வலியுறுத்தவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெகுவிரைவாக நடத்தப்பட வேண்டும்என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நாட்டு மக்கள் அறிந்துக் கொண்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This