சென்னையில் அதிகாலை முதல் காற்றுடன் கூடிய மழை!

சென்னையில் அதிகாலை முதல் காற்றுடன் கூடிய மழை!

சென்னையில் கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் அதிகாலை மழை பெய்து வருகிறது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This