தமிழக வரவு – செலவுத்திட்டம் நாளை தாக்கல்!

தமிழக வரவு – செலவுத்திட்டம் நாளை தாக்கல்!

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான பொது வரவு – செலவுத்திட்டத்தினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் நாளை தாக்கல் செய்கிறார்.

இதில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம். மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினரை சமாதானப்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This