வரலாற்றில் இன்று – மார்ச் 19 : இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார் – 1988

வரலாற்றில் இன்று – மார்ச் 19 : இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார் – 1988

1853 – தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது கன்னிப் பயணத்திலேயே மூழ்கியது. இதன் எச்சங்கள் 1963 ஆம் ஆண்டில் இதே நாளில் கண்டுபிடிக்கப்பட்டன.

1895 – லூமியேர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர்.

1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.

1918 – அமெரிக்க காங்கிரஸ் நேர வலயங்களை நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.

1920 – அமெரிக்க மேலவை இரண்டாவது தடவையாக வெர்சாய் ஒப்பந்தத்ததி நிராகரித்தது (முதல் தடவை 1919 நவம்பர் 19 இல் நிராகரித்திருந்தது).

1931 – அமெரிக்காவின் நெவாடாவில் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்படட்து.

1932 – சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜேர்மனியப் படைகள் அங்கேரியைக் கைப்பற்றின.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியில் அனைத்துத் தொழிற்சாலைகள், இராணுவத் தளங்கள், தொடர்பு வசதிகள் அழிக்கப்பட வேண்டும் என கிட்லர் ஆணையிட்டார்.

1946 – பிரெஞ்சு கயானா, குவாதலூப்பு, மர்தினிக்கு, ரீயூனியன் ஆகியன பிரான்சின் வெளிநாட்டு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.

1958 – நியூயார்க்கில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியதில் 24 பேர் உயிரிழந்தனர்.

1962 – அல்சீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1964 – பிரேசிலில் அரசுக்கு எதிராகவும் கம்யூனிசத்திற்கு எதிராகவும் 500,000 மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1965 – 1863 இல் இதே நாளில் கடலில் மூழ்கிய $50,000,000 பெறுமதியான ஜார்ஜியானா கப்பலின் எச்சங்கள் 102 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டன.

1972 – இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1982 – போக்லாந்து போர்: அர்கெந்தீனப் ப் படையினர் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.

1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.

2002 – ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

2002 – சிம்பாப்வே மனித உரிமை மீறல்கள், தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பொதுநலவாயத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டது.

2004 – பால்ட்டிக் கடலில் 1952 இல் உருசிய மிக்-15 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சுவீடனின் டிசி-3 விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2004 – சீன குடியரசின் அரசுத்தலைவர் சென் சூயி-பியான் சுடப்பட்டார்.

2008 – ஜிஆர்பி 080319பி என்ற அண்ட வெடிப்பு அவதானிக்கப்பட்டது.

2011 – லிபிய உள்நாட்டுப் போர்: கடாபியின் படைகள் பங்காசி நகரைக் கைப்பற்றத் தவறியதை அடுத்து, பிரெஞ்சு வான் படை லிபியா மீது தாக்குதலை ஆரம்பித்தது.

2013 – ஈராக்கில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 98 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் காயமடைந்தனர்.

2016 – பிளைதுபாய் 981 விமானம் ரஷ்யாவில் ரஸ்தோவ் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கும் போது மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 62 பேரும் உயிரிழந்தனர்.

2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.

CATEGORIES
TAGS
Share This