மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்து – விமானிகள் இருவர் பலி!

மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்து – விமானிகள் இருவர் பலி!

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றியது. இந்த விபத்தில் விமானி மற்றும் பெண் பயிற்சி விமானி ஆகியோர் பலியாகினர். விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விமானம் மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டம் பிர்சி விமான நிலையத்தில் இருந்து வந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This