

இம்ரான் கானின் வீட்டிற்குள் பொலிசார் வலுக்கட்டாயமாக நுழைவு!
பாகிஸ்தானின் பஞ்சாப் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜமான் பூங்காவில் உள்ள வீட்டின் கதவை உடைத்து பலவந்தமாக உள்ளே நுழைந்ததாக பஞ்சாப் பொலிசாரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு முன்னாள் பிரதமர் சென்றிருந்த வேளையில் அவரது வீட்டுக்குள் பொலிசார் நுழைந்தனர்.
அப்போது வீட்டில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பேகம் இருந்தார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், மனைவி வீட்டில் தனியாக இருக்கும் போது கதவுகளை உடைத்து உள்ளே நுழைய அவர்களுக்கு என்ன சட்ட உரிமை உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
CATEGORIES உலகம்