நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் திருட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் !!

நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் திருட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் !!

நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் திருட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலேயே ஊழல் அங்கீகரிக்கப்பட்டு திருடர்களின் தேசமாக இந்த நாடு மாறியது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழலில் ஈடுபடும் ஒரு தோல்வியடைந்த நாடு இலங்கை என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர்கள் செய்யும் திருட்டுக்கள் பிடிபடாதவரை அவை தொடரும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This