சீன ஜனாதிபதி ரஷ்யா பயணம்!

சீன ஜனாதிபதி ரஷ்யா பயணம்!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கட்கிழமை ரஷ்யா செல்கிறார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஜனாதிபதி புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யா செல்ல உள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி ரஷ்யா செல்லும் ஜனாதிபதி, எதிர்வரும் 23 ஆம் திகதி அங்கிருந்து சீனா திரும்புகிறார் என தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர புதினுக்கு ஜி ஜின்பிங் அழுத்தம் கொடுப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஹூவா சுன்யிங், பேச்சுவார்த்தைதான் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்பதில் சீனா நம்பிக்கை கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This