

“இதுதான் ஆரம்பம்” என்கிறார் உக்ரைன் ஜனாதிபதி!
உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய ஜனாதிபதி புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய முறைப்பாடுகள் எழுந்தன.
இந்த முறைப்பாடுகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதற்கிடையே, போர்க் குற்றம் புரிந்ததாக கூறி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜனாதிபதி புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இதுதான் ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.
CATEGORIES உலகம்