கொலம்பியாவில் சுரங்க வெடி விபத்து ; 21 தொழிலாளா்கள் பலி!

கொலம்பியாவில் சுரங்க வெடி விபத்து ; 21 தொழிலாளா்கள் பலி!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சுரங்க வெடி விபத்தில் 21 தொழிலாளா்கள் பலியானதாக அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்தனா்.

அந்த நாட்டின் சுடசாயுசா நகருக்கு அருகேயுள்ள சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கத்தில் வாயில்கள் மூடின.

இந்த நிலையில், 2 நாள்களாக இடைவிடாமல் நடைபெற்ற மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த விபத்தில் 21 தொழிலாளா்கள் பலியானதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

கொலம்பியாவில் நிலக்கரி மற்றும் தங்கச் சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் அங்கு 117 சுரங்க விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This