இம்ரான் கான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

இம்ரான் கான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கில் அவர் ஆஜராகாததால் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

ஆனால் அவர் வழக்கில் ஆஜராகவில்லை. இதனால் நேற்று முன்தினம் இம்ரான்கானை கைது செய்யும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக களமிறங்கினர். அதன்படி நூற்றுக்கணக்கான பொலிஸ்காரர்கள் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனையறிந்த அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட வன்முறையில் அவரது ஆதரவாளர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அதில் ஏராளமான பொலிசார் காயமடைந்தனர். இம்ரான்கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவரை கைது செய்வதற்கான தடையை தற்காலிகமாக நீட்டித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிசாருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இம்ரான்கான், அவரது நெருங்கிய உதவியாளர் ஷா மெக்மூத் மற்றும் ஏராளமான தொண்டர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This