நாகாலாந்தில் 121 வயது பெண் காலமானார்!

நாகாலாந்தில் 121 வயது பெண் காலமானார்!

நாகலாந்தில் 121 வயது வரை வாழ்ந்து மறைந்து இருக்கிறார் ஒரு பெண். அவரது பெயர் புபிரே புகா. வயது முதிர்வு காரணமாக இவர் நேற்று காலமானார்.

இத்தனை வயது ஆனாலும் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தார். கண்கள் நன்றாக தெரிந்தது. காதுகளும் நன்றாக கேட்டது. இது வரை இவர்மருத்துவமனைப் பக்கமே சென்றது இல்லை என கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

புபிரே புகா மறைந்த செய்தி அறிந்ததும் உறவினர்கள், கிராமமக்கள் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இத்தனை வயது வரை வாழ்ந்ததை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கடந்த மாதம் நடந்த நாகாலாந்து சட்டசபை தேர்தலில் இவர் தபால் ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This