

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது.
சுமார் 4 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு நேற்று 700ஐ தாண்டியிருந்தது. நேற்று ஒரே நாளில் 754 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரை யிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 226 பேர், குஜராத்தில் 119 பேர், கேரளாவில் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 93 ஆயிரத்து 506 ஆக உயர்ந்து உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 388 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 57 ஆயிரத்து 685 பேர் குணமடைந்து உள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவர்கள் எண்ணிக்கை 5,026 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 403 அதிகமாகும்.