பஸிலின் கருத்தினால் கடும் அதிருப்தியில் மஹிந்தானந்த?

பஸிலின் கருத்தினால் கடும் அதிருப்தியில் மஹிந்தானந்த?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டமொன்று கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றுள்ளது.

பஸில் ராஜபக்ச உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளாட்சி சபைத் தேர்தல், மேதினக் கூட்டம் உள்ளிட்ட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இம்முறை மே தினக் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலும் சில அரசியல் பிரமுகர்களும் ஆதரவான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

எனினும், இதற்கு பஸில் ராஜபக்ச எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொகுதி மட்டத்தில் கூட்டங்களை நடத்தினால் போதும் எனவும், பிரமாண்ட கூட்டங்கள் அவசியமில்லை எனவும், மக்களிடமும் பணம் இல்லை எனவும் பஸில் கூறியதாக கூறப்படுகின்றது.

பஸில் ராஜபக்சவின் இந்த கருத்தினால் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது அதிருப்தியடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This