காற்று மாசுப் பட்டியலில் முன்னேறும் இந்தியா!

காற்று மாசுப் பட்டியலில் முன்னேறும் இந்தியா!

உலகின் முதல் 100 மாசுபட்ட நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் உள்ளன என்ற தகவல் கவலைகளை அதிகரிக்கிறது.

சர்வதேச அளவில் 7300 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட காற்று மாசு ஆய்வில் பட்டியலின் முதல் 100 பட்டியலில் 65 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான சுவிஸ் நிறுவனமான IQAir இன் சமீபத்திய மாசுபாடு தரவரிசை வெளியாகியுள்ளது.

உலகளவில் காற்று மாசு அதிகம் உள்ள (Air Pollution) முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்பதைக் காட்டும் இந்த ஆய்வில்,131 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. 7,300 நகரங்களில், முதல் 100 மாசுபட்ட நகரங்களில் 65 இந்தியாவில் உள்ளன.

இந்தியாவின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பட்டியலில் உங்கள் நகரம் இடம் பெற்றுள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

பிவாடி, ராஜஸ்தான்
PM2.5 – 92.7 μg/m³

இந்த நகரம் ஒட்டுமொத்தமாக மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் மாசுபட்ட இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன் PM2.5 (துகள்கள் 2.5) அளவுகள் உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்ததை விட 18.5 மடங்கு அதிகமாக இருந்தது. WHO வழிகாட்டுதல்களின்படி, ஆண்டு சராசரி செறிவுகள் 5 µg/m3 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.

டெல்லி, இந்தியா
PM2.5: 92.6 μg/m³

நகரம் ஒட்டுமொத்தமாக மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் மாசுபட்ட மூன்றாவது இடத்தில் உள்ளது. பிவாடியை விட சற்று குறைவு, ஆனால் டெல்லியின் PM2.5 அளவுகள் கூட WHO பரிந்துரைத்ததை விட 18.5 மடங்கு அதிகமாக இருந்தது.

தர்பங்கா, பீகார்
PM2.5 – 90.3 μg/m³

பீகாரின் தர்பங்கா நகரம் ஒட்டுமொத்தமாக மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் காற்று மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதன் PM2.5 அளவுகள் WHO பரிந்துரைகளை விட சுமார் 18 மடங்கு அதிகமாக இருந்தது.

இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 60 சதவீத இந்திய நகரங்கள், சர்வதேச சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை விட குறைந்தபட்சம் ஏழு மடங்கு அதிகமாக வருடாந்திர PM2.5 அளவை பதிவு செய்துள்ளன.

அசோபூர், பீகார்
PM2.5 – 90.2 μg/m³

பீகாரின் அசோபூர் நகரம் ஒட்டுமொத்தமாக பிராந்தியத்தில் மிகவும் மாசுபட்ட பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. அதன் PM2.5 அளவுகள் WHO பரிந்துரைகளை விட 18 மடங்கு அதிகமாக இருந்தது.

பாட்னா, பீகார்
PM2.5 – 88.9 μg/m³

பாட்னா நகரம் ஒட்டுமொத்தமாக பிராந்தியத்தில் அதிக மாசுபட்ட நகரங்களில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதன் PM2.5 அளவுகள் WHO பரிந்துரைகளை விட 17.7 மடங்கு அதிகமாக உள்ளது.

மத்திய மற்றும் தெற்காசியாவில் மிகவும் மாசுபட்ட 15 நகரங்களில் 12 இந்தியாவில் உள்ளன. இந்த பிராந்தியத்தில், பங்களாதேஷ், இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

காசியாபாத், உத்தரபிரதேசம்
PM2.5 – 88.6 μg/m³

காசியாபாத், ஒட்டுமொத்தமாக பிராந்தியத்தில் மிகவும் மாசுபட்ட எட்டு நகரங்களில் ஒன்று. அதன் PM2.5 அளவுகள் WHO பரிந்துரைகளை விட 17.72 மடங்கு அதிகமாக இருந்தது.

தருஹேரா, ஹரியானா
PM2.5 – 87.8 μg/m³

நகரம் ஒட்டுமொத்தமாக பிராந்தியத்தில் மிகவும் மாசுபட்ட ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதன் PM2.5 அளவுகள் WHO பரிந்துரைகளை விட 18 மடங்கு அதிகமாக இருந்தது.

சாப்ரா, பீகார்

PM2.5 – 85.9 μg/m³

இந்த நகரம் ஒட்டுமொத்தமாக மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் மாசுபட்ட பத்தாவது இடத்தில் உள்ளது. அதன் PM2.5 அளவுகள் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சுமார் 17.18 மடங்கு அதிகமாக இருந்தது.

முசாபர்நகர், உத்தரபிரதேசம்
PM2.5 – 85.5 μg/m³

நகரம் ஒட்டுமொத்தமாக பிராந்தியத்தில் மிகவும் மாசுபட்ட பதினொன்றாவது இடத்தில் உள்ளது. அதன் PM2.5 அளவுகள் WHO பரிந்துரைகளை விட 17.1 மடங்கு அதிகமாக இருந்தது.

கிரேட்டர் நொய்டா, உத்தரபிரதேசம்
PM2.5 – 83.2 μg/m³

இந்தியாவின் தலைநகரான புது தில்லிக்கு அருகில் அமைந்துள்ள கிரேட்டர் நொய்டா நகரம், ஒட்டுமொத்தமாக மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் 13வது இடத்தில் உள்ளது. அதன் PM2.5 அளவுகள் WHO பரிந்துரைகளை விட 16.64 மடங்கு அதிகமாக இருக்கிறது.

CATEGORIES
TAGS
Share This