

நேபாள வான் பகுதியில் சீன ரொக்கெட்!
உளவு செயற்கைக் கோளை அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட சீன ரொக்கெட், நேபாள வான் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
இத்தகவலை ஐக்கிய நாடுகள் கடற்படை நிறுவனம் கூறி உள்ளது. மத்திய சீனாவில் இருந்து செலுத்தப்பட்ட சாங் செங் 2டி லாங் மார்ச் என்ற அந்த ரொக்கெட், உளவு செயற்கைக் கோள்களை விடுவித்த பின்னர் சுமார் 200 நாட்கள் விண்வெளியில் இருந்த பிறகு, கடந்த சனிக்கிழமையன்று வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது.
அப்போது நேபாள வான் பகுதிக்குள் நுழைந்தபோது, ரொக்கெட் தீப்பற்றியதாக வானியல் விஞ்ஞானி ஜோனாதன் மெக்டோவல் கூறியிருக்கிறார்.
இதே மத்திய சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட ராக்கெட், தென் சீனக் கடலை கண்காணிப்பதற்கான மூன்று உளவு செயற்கைக் கோள்களை விடுவித்தபின், கடந்த 8ம் திகதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில வான் பகுதியில் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES உலகம்