

பிரித்தானியாவில் டிக்டாக் செயலிக்கு தடை!
பிரித்தானியாவிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு அலுவலக கைத்தொலைபேசிகளில் டிக்டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆலிவர் டவ்டன் கூறினார். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள செயலிகளை மட்டுமே அரசு அலுவலக கைத்தொலைபேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
CATEGORIES உலகம்