திருப்பதியில் வசந்த உற்சவம்!

திருப்பதியில் வசந்த உற்சவம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3ஆம் திகதி உற்சவம் தொடங்குகிறது.

அன்று காலை 7 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது. பின்னர் வசந்த மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு அபிஷேகம், நெய்வேத்தியம் செய்யப்பட்டு கோவிலுக்கு திரும்புகின்றனர். இரண்டாம் நாளான 4ஆம் திகதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி தங்க ரதத்தில் எழுந்தருளி காலை 8 மணி முதல் 10 மணி வரை மாடவீதிகளில் உலா நடக்கிறது. பின்னர், வசந்த மண்டபத்தில் அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This