விபத்தில் சிக்கிய இராணுவ ஹெலிகாப்டர் – விமானிகள் இருவர் பலி!

விபத்தில் சிக்கிய இராணுவ ஹெலிகாப்டர் – விமானிகள் இருவர் பலி!

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த 2 விமானிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டது. இந்திய ராணுவம், சகஷ்த்ர சீமா பால் மற்றும் இந்தோ திபெத்திய எல்லை காவல் படையினர் 5 குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மண்டாலாவின் கிழக்கே பங்ளாஜாப் கிராமத்தின் அருகில் ஹெலிகாப்டரின் எரிந்த பாகங்கள் கண்டுபிடிக்கபப்ட்டன. அதில் பயணித்த விமானிகள் விவிபி ரெட்டி, மேஜர் ஜெயந்த் ஆகியோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This