

ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து சுரங்க தொழிலாளர்கள் 17 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து சுரங்க தொழிலாளர்கள் 17 பேர் பலியாகியுள்ளனர்.
தாகார் மாகாணத்தில் உள்ள சக்அப் என்ற இடத்தில் இருந்து அன்ஜீர் பகுதிக்கு நிலக்கரி சுரங்க தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி 17 பேர் இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
CATEGORIES உலகம்