ஜூன் 14ஆம் திகதி வரை ஆதாரை இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்!

ஜூன் 14ஆம் திகதி வரை ஆதாரை இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்!

இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மக்கள் தங்கள் ஆதார் தகவல்களை இலவசமான முறையில் ‘மை-ஆதார்’ இணையதள பக்கத்தின் மூலம் மார்ச் 15ஆம் திகதி முதல் ஜூன் 14ஆம் திகதி வரை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

ஆதார் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆதார் இணையதள பக்கத்தின் வாயிலாக தகவல்களைப் புதுப்பிக்க ரூ.25 கட்டணமாக செலுத்தவேண்டியிருந்தது. இருப்பினும், பெயர், பிறந்த திகதி, முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்வதற்கு வழக்கத்தில் உள்ள கட்டணம் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This