இன்று மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு!

இன்று மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு!

தேர்தல் ஆணைக்குழு இன்று முற்பகல் மீண்டும் கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான நிதி இதுவரை நிதியமைச்சினால் விடுவிக்கப்படாததைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு கோரி மீண்டும் திறைசேரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This