

நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு ஊடுருவல்!
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு ஊடுருவப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாள நாட்டு பிரதமரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்காக பிஎம்ஓ நேபாளம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், அந்த பக்கம் இன்று அதிகாலை ஊடுருவப்பட்டுள்ளது.
மேலும், இந்த டிவிட்டர் பக்கத்தின் முகப்பு படமாக பிரதமர் புஷ்ப கமல் தஹால் புகைப்படம் இருந்த நிலையில், வேறு புகைப்படம் மாற்றப்பட்டு பெயரும் மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, அரசுக்கு சம்பந்தமில்லாத செய்திகளை ரீட்வீட் ஆகியுள்ளது.
இந்நிலையில், பிரதமரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
CATEGORIES உலகம்