

ஏப்ரல் 25 தேர்தல் நடத்த வாய்ப்பில்லை
தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கான சாத்தியங்கள் குறைவு என நியாயமானதும் சுதந்திரமானதுமான பவ்ரல் தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இந்த விடயத்தில் நீதிமன்ற முடிவுகளை கூட புறக்கணிப்பது வருந்தத்தக்கது. நீதிமன்ற முடிவுகளைக் கூட புறக்கணிக்கும் நிலைமைக்கு அரசாங்கம் வந்துள்ளது என பவ்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஹன ஹெட்டியாரச்சி குற்றஞ்சாட்டினார்.
இதன் காரணமாக நாடாளுமன்றம் நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிடையே சமநிலை இப்போது முழுமையான குழப்பத்தில் உள்ளது.
உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் சதி செய்து வருகிறது. நாடாளுமன்ற வரப்பிரசாதத்துக்கு பின்னால் மறைந்திருந்து, நீதிமன்ற தீர்ப்பை சவால் செய்வதன் மூலம் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.