பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி இணையானவர் இல்லை – எடியூரப்பா

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி இணையானவர் இல்லை – எடியூரப்பா

முன்னாள் முதமைச்சர் எடியூரப்பா விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொண்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் எங்கள் கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. எங்கள் இரட்டை என்ஜின் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கூறி வருகிறோம்.

கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இணையானவர் இல்லை. வெளிநாட்டிற்கு சென்று நமது நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று ராகுல் காந்தி குறை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

CATEGORIES
TAGS
Share This