புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட அமெரிக்க ஜனாதிபதி!

புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், துப்பாக்கியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அவ்வகையில், சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதிக்கு சென்ற போது, துப்பாக்கி வாங்குவோரின் பின்னணி குறித்த விசாரணைகள் மற்றும் சோதனைகளை விரைவுபடுத்தும் புதிய நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

அத்துடன், துப்பாக்கி சூடு நடந்த மான்டேரி பார்க் சென்று, இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிபயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள், தோட்டாக்களைத் தடை செய்வதில் தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This