காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்!

காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்!

தமிழகம் முழுவதும் ‘இன்புளூயன்சா’ வைரஸ் காய்ச்சல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

3 வகையான இந்த வைரசால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். பருவமழை காலத்தில் வழக்கமாக இருக்கக்கூடிய இந்த காய்ச்சல் இந்த ஆண்டு குளிர்காலம் கடந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து வயதினரையும் இந்த வைரஸ் தாக்கி வருவதால் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி போன்றவற்றால் குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த வைரசை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார துணை இயக்குனர்களுக்கு இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை புதிய வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ள நிலையில் அதனை பின்பற்ற தமிழக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த வகை வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதையும், குடும்பத்தினரிடம் நெருக்கமாக இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This